Sunday, November 22, 2009

குரு பூஜை

வள்ளலார் பக்தர்களுக்கு ஓர் செய்தி:

வருகின்ற செவ்வாய் கிழமை வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களின் குரு பூஜை நடைபெற உள்ளது. வள்ளலார் பக்தர்கள் இப் பூஜையில் கலந்துக்கொண்டு வள்ளலார் அருளை பெறலாம். காரணப்பட்டில் உள்ள ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களின் சமாதியில் வள்ளலாரின் பொற்பாத குறடுகள் இருப்பது குறிப்பிட வேண்டிய செய்தியாகும். காரணப்பட்டு செல்ல கடலூரில் இருந்து நகர பேருந்து செல்கிறது. மேலும் விவரங்களுக்கு எனது கைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். (9442068720)

Friday, October 30, 2009



சிதம்பரம் இராமலிங்கம்
&
காரணப்பட்டு ச.மு. கந்தசாமி பிள்ளை

அன்பின் வழியது உயிர்நிலை அக்திலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு


அன்போடு பொருந்தி நின்ற உடலே, உயிர் நிலை பெரும் உடம்பாகும். அன்பில்லாதவர் உடல், எலும்பை தோலால் முடப்பட்ட எலும்புக்கூடே ஆகும் என்று திருவள்ளுவர் கருத்தக்கு ஏற்ப நமது வள்ளலார் அவர்கள் ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை என்ற பேரன்பு வழியில் நடை பயின்று அன்பு தோல் போர்த்த அவரது உடம்பில் உயிர் நிலை பெற்று மரணமிலா பெருவாழ்வு பெற்று நம்மோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.

அவர் நமக்கு, இறைவன் கூறியதாக நம்மிடம் போதித்த பல கருத்துகள் நமக்கு வியப்பை அளிப்பதாக உள்ளது. எனக்கு தெரிந்த சில கருத்துகளை எண்ணிப்பார்க்கிறேன் ...........

  1. மனிதன் என்பவன் ஆன்மநேய ஒருமைபாட்டுரிமையோடு வாழ வேண்டும்.

  2. மனிதன் என்பவன் கொலை, புலை தவிர்தவனாக வாழ வேண்டும்.

  3. மனிதன் என்பவனுக்கு ஜாதி, மதம், இனம், சாத்திரம் போன்ற பாகுபாடுகள் அறவே இருக்கக் கூடாது. இவைகள் எல்லாம் பொய்.

  4. மனிதன் என்பவனுக்கு சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவைகளின் பெயரில் உயிர்களை பலியிடக்கூடாது.

  5. மனிதன் என்பவன் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடை பிடிக்கவேண்டும். அதுவே மோட்ச வீட்டின் திறவுகோல். ஜீவகாருன்யமுள்ள சமுசாரிகளுக்கு, அவர்களுடைய அஜாகர்தயால் கூட சிறிதேனும் ஆபத்து வராது.
  6. மனிதன் என்பவனுக்கு வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தேவைஇல்லை. இவைகளில் சிறிதேனும் உண்மை இல்லை.
  7. மனிதன் என்பவனுக்கு பக்தி என்பது, மன நேகிழ்சியே ஆகும். "நினைத்து நினைத்து ...." என தொடங்கும் மன நெகிழ்சியை கொடுக்கும். அவ்வமயம் உண்டாகும் உடலின் வெப்பத்தை, ஜானிகள் பல வருடங்கள் கடுமையாக உடலை வருத்தி செய்யும் தவத்தினாலும் பெரமுடியததாகும். எனவே தவம், தியானம், பூஜைகள், யாகங்கள், விரதங்கள், முதலியவைகள் வேண்டாம். இவைகளுக்கும் பக்திக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது.
  8. மனிதன் உட்பட எவ்வுயிரின் உடலும் இந்த பிறப்பில் இறந்துவிட்டால் மறுபிறவி எடுத்தே தீரவேண்டும்.
  9. மனிதன் என்பவன் ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஆகிய ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
  10. மனிதன் என்பவன் தனது பிறவி பெருங்கடலை கடக்க வேண்டும் என்றால் அவன் இறக்காமல் இருக்க வேண்டும். இரவா வரத்தை மனிதன் மட்டுமே பெறமுடியும். முவர்களுக்கும், தேவர்களுக்கும், இறப்பு நிச்சயம் உண்டு.
  11. மனிதன் என்பவனுக்கு சாகாகல்வியே கல்வி, மற்ற கல்வி எல்லாம் சாகும் கல்வியே . எனவே மனித உடல் எடுத்தவர்களெல்லாம் காலத்தை வீணே கழிக்காமல் காலம் உள்ளபோதே சாகா கல்வியை கற்கவேண்டும்.
  12. மனிதன் என்பவனுக்கு சாகா கல்வியை கற்பிப்பது சன்மார்கம் மட்டுமே. சன்மார்கிகளால் மட்டுமே மரணத்தை வெள்ள முடியும். எமது மார்க்கம் இறப்பை ஒழிக்கும் சன்மார்க்கம்.
  13. மனிதன் என்பவனுக்கு முதன் முதலில் சகாகல்வியை ஒரு குறிஈடாக காடிஎருப்பது இந்து மததிலாகும். மற்றும் திருக்குறளில் வரும் "நீடு வாழ்வார்" என்ற சொல் இந்த மரணமிலா பெருவாழ்வையே குறிக்கும். இதனை தக்க குருவின் மூலம் அறியவும்.
  14. மனிதன் என்பவன் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே உறங்க பழக்க படுத்தி கொண்டால் அவன் ஆயிரம் வருடங்கள் இப்புவியில் வாழலாம் . எனவே அதிக காலம் வாழ உறக்கத்தை குறைக்கவேண்டும் .
  15. மனிதன் என்பவன் , தான் உண்டாக்கிய மொஜிகளுக்கெல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம் என்றால் தந்தை மொழி தமிழ் மொழி யாகும் .
  16. மனிதனின் தந்தை மொழியாகிய தமிழ மொழியில் உள்ள இலக்கணங்களில், நிறைய பிழைகள் உள்ளது . உதாரணமாக 80 என்ற எண்ணை "என்பது " என்று அழைப்பது போல , 90 என்ற எண்ணை "தொன்பது " என்று அழைக்கவேண்டும் . ஆனால் நாம் "தொண்ணுறு " என்று நூரின் விகுதிகளில் தவறாக அழைக்கிறோம் . 800 என்ற எண்ணை "எண்ணூறு " என்று அழைப்பது போல 900 என்ற எண்ணை "தொண்ணூறு " என்று அழைக்கவேண்டும் . ஆனால் நாம் " தொள்ளாயிரம் " என்று ஆயிரம் விகுதிகளில் தவறுதலாக அழைக்கிறோம் . இது போன்ற குறைகள் உள்ளன.
  17. மனிதன் என்பவன் தமது உலகத்தை தவிர வேறு உலகத்தை அறியாதவன். ஆனால் ஆயிரம் கணக்கான உலகங்கள் இப்பஇரபஞ்சத்தில் உண்டு. என்னால் முடிந்தவரை சுமார் முவாயிரம் உலகங்களுக்கு பெயரிட்டு, இதனை விரிக்கின் இன்னும் விரியும் என்று முடித்துள்ளேன். எனது பார்வை இப்போது அண்டம் அண்டக்களுக்கு அப்பால் உள்ளது.
  18. மனிதன் என்பவன், தனது அரிவாள், மழை பொழியும் காரணத்தை தவறாக கணித்து உள்ளான். பூமியில் உள்ள நீர் ஆவியாக மாறி அது மேகமாக உரு பெற்று, அது குளிரும் போது மழை பொழியும் என கூறுகிறான். இது தவறு. மழை என்பது முற்றிலும் இறைவனின் பெரும் கருணையால் மட்டுமே பொழிகிறது.
  19. மனிதன் என்பவனுக்கு, ஜீவகருன்யா ஒழுக்கத்தால் முதலில் சிறு ஒலி தோன்றும். அப்போது சித்திகள் கைகூடும். அதனை ஒரு பொருட்டாக நினைக்காமல் அதற்கு மேல் கடந்து இறை நிலையை அடைய வேண்டும் . பலரது அருள் வாழ்க்கை இந்த சித்து விளையாட்டோடு முடிந்து இறந்து விடுகிறார்கள் .
  20. மனித சமூகத்தில் நான் செய்த பல சித்துகள் என்னையும் அறியாமல் நடந்தவை . என் உடம்பில் உள்ள ஒரு முடியே செத்தாரை எழுப்பும் வல்லமை படைத்தது .

இப்படி பல கருத்துகளை கூறிக்கொண்டே போகலாம்... என்ன வியப்பாக இருக்கின்றதா? நாம் மதங்களையும், சாதிகளையும் பற்றிக் கொண்டிருந்தால் வியப்பாகத்தான் இருக்கும்....

---தி. ம. இராமலிங்கம். ( மேல் அசிஞ்சிப்பட்டு கிராமம்)